ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 206 ரன்கள் குவித்த நிலையில், 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.