திருச்செந்தூரில், வரும் 22ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா வரும் அக்.22ஆம் தேதி தொடங்கி, சிகர நிகழ்ச்சியாக, அக். 27ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வருகை தர இருப்பதால், கோயில் வளாகத்தில் தற்காலிக கொட்டகை அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில், மணலை சமன்படுத்தும் பணியும் தொடங்கி உள்ளது. கடற்கரையில், அய்யா கோயில் அருகில் இருந்து, கோயில் முன்பு வரையிலும் ஜேசிபி இயந்திரம் மூலம், மணல்மேடு அகற்றப்பட்டு சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருச்செந்தூர், கந்த சஷ்டி விழாவிற்கு தயாராகி வருகிறது.