WTT 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா-தியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. துனிசியாவில் நடைபெற்ற இறுதி சுற்றில் ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியுடன் மோதினர். இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.