உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ட்ரம்ப்பை சந்திக்க தயாராக இருப்பதாகவும், தற்போது ரஷ்யா வசம் இருக்கும் பகுதிகளை உக்ரைனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.