குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சுதர்சன் ரெட்டி, வேட்புமனு தாக்கல் செய்தார்.காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சரத் பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.வேட்புமனு தாக்கலுக்கு முன் சுதர்ஷன் ரெட்டி கூறியதாவது;போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன். இது ஒரு சித்தாந்த போர். இன்றைய நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அது மிகவும் எளிமையானது. தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.