ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் ஆட்டத்தின் போது பவுண்டரியை தாண்டி தலைக்கு மேல் பறந்து சென்ற பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரிஸ்பேன் ஹீட் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது வில் சிக்சர் அடிக்க முயன்ற பந்தை மேக்ஸ்வேல் கேட்ச் பிடித்தார்.