ரஷ்யாவில் சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் அவர்கள் தங்குவதற்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து, 2027-ம் ஆண்டில் 3 சதவீதம் என்ற அளவுக்கு உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்குவதற்கான கட்டணத்துடன் சேர்த்து இந்த வரி சுற்றுலாப்பயணிகளிடம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது