news-tamil-logo

3/19/2026, 1:58:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாடு பட்ஜெட் 2025 மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு பட்ஜெட் 2025 மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள்

Posted on: Mar 14, 2025 12:46 PM

95

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17


தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள்

▪ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

▪மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு – இதுவரை பலன் பெறாதவருக்கும் கிடைக்க நடவடிக்கை

▪100 கோடியில் சென்னை அறிவியல் மையம்

▪2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு E-bike வாங்க ரூ.20,000 மானியம்

▪காஞ்சிபுரம் அரசு அண்ணா மருத்துவமனை ரூ.120 கோடியில் தரம் உயர்வு

▪மதுரை கடலூரில் 250 கோடியில் காலணி தொழில் பூங்கா 20,000 பேருக்கு வேலை

▪ஓசூரில் ரூ.400 கோடியில் புதிய டைடல் பூங்கா

▪காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெரும் பள்ளிக்கும் விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு

▪திருச்சியில் 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழில் பூங்கா - 5000 பேருக்கு வேலைவாய்ப்பு

▪சென்னை பெருநகர் பகுதிகளில் ரூ.88 கோடியில் மழை நீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள்

▪திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை நதிக்கரை மேம்பாட்டிற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

▪புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்

▪10,000 மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டு ரூ.37,000 கோடி வழங்க இலக்கு

▪வேளச்சேரியில் ரூ.310 கோடியில் புதிய பாலம் கட்டப்படும்

▪ சென்னை கோவை மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்

▪நாட்டில் சிறந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகத்தை உருவாக்க நடவடிக்கை

▪ஐ.நா அங்கீகரித்த 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்

▪கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 6,100 கி.மீ. சாலைகள் அமைக்கப்படும்

▪பள்ளிப்பாடத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும்

▪விண்வெளி தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு

▪அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்

▪இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. மத்திய அரசு கொடுக்காத கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே ரூ.2,000 கோடி ஒதுக்கும்

▪கோவளத்தில் 14 tmc கொள்ளளவு கொண்ட புதிய நீர் தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும்

▪செமி கண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா கோவையில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்

▪புதிய புனல் மின் நிலையங்கள் ரூ.11,721 கோடியில் வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளில் அமைக்கப்படும்

▪சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் நடவடிக்கை

▪ரூ.70 கோடியில் 700 இயற்கை எரிவாயு பேருந்துகள்

▪சென்னைக்கு 950ம், கோவைக்கு 75ம், மதுரைக்கு 100 பேருந்துகள் என 1,125 மின் பேருந்துகள் இயக்க நடவடிக்கை

▪19,000 கைவினையர்களுக்கு மானியமாக ரூ.74 கோடி

10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் உதவி

▪உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்

▪சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது – 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை

▪புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்

▪ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி!

▪பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க, தர்காக்களை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!

▪பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000

▪சென்னை கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம்

▪சென்னை சீராக்க குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு

▪102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைப்புக்கு ரூ.675 கோடி ஒதுக்கீடு

▪மகளிர் விடியல் பயணம்த்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு

▪சென்னைக்கு அருகில் உலகத்தரத்தில் புதிய நகரம்

▪10 இடங்களில் ரூ.77 கோடி செலவில் தோழி விடுதிகள்

▪கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.2,000 கோடி

▪அன்பு சோலை முதியோர் பராமரிப்பு மையம் 10 இடங்களில் அமைக்கப்படும்

▪அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.50 கோடியில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்

▪கலைஞர் கனவு இல்லம் – ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி

▪மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயிற்சியளித்து ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம்

▪வியன் திறன் மிகு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

▪4000 மெகா வாட் திறன் கொண்ட மின் கலன் சேமிப்பு அமைப்புகள்

▪கடல் சார் வள அறக்கட்டளைக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு

▪ரூ.40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபு சார் காட்சி அரங்கம்

▪தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்

▪பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு!

▪ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்!

▪நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு - 5,256 குடியிருப்புகள் சீரமைப்புக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

▪திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயர்மட்ட சாலை 14.2 கி.மீ நீளத்திற்கு அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு

▪ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிப்பு

▪இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

▪மீன் பிடி தடை கால ஊக்கத்தொகை ரூ.8,000 ஆக உயர்வு

▪இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ரூ.500 உதவித்தொகை

▪நான்காண்டுகளில் 78,882 பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

▪ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடி

▪மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்த ஆய்வு

▪நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் - ரூ.75 கோடி ஒதுக்கீடு

▪முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 3000 புதிய வீடுகள்

▪எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்

▪உதகையில் ரூ.70 கோடியில் புதிய பூங்கா அமைக்கப்படும்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 11 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved