Also Watch
Read this
Posted on: Feb 23, 2026 07:46 AM
By: Manigandan Raja

இங்கிலாந்து அணி வெற்றி :
சூப்பர் 8 சுற்றில் குரூப்-2 பிரிவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது. இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை சேர்த்தது.
அதிகபட்சமாக பிலிப் சால்ட் 40 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி, இங்கிலாந்து அணியில் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 16.4 ஓவர்களில் இலங்கை அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர், லியான், ஆதில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved