DHOOM 4 படத்தில் ரன்பீர் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரன்பீர் கபூர் 'லவ் அண்ட் வார்', 'ராமாயணம்' படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக DHOOM 4 படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரன்பீர் கபூரும் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.