news-tamil-logo

3/18/2026, 11:48:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்
tv

Also Watch

tv

Read this

ஆப்ரேஷன் தேமுதிக, பாலில் விழுந்த பழம்

கேப்டன் சொந்தங்கள் ஏற்பார்களா?

Posted on: Feb 20, 2026 07:02 AM

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேமுதிகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, திமுக உடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், கூட்டணி கை கூட யார் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வட மாவட்டங்களில் செல்வாக்கான கட்சியாக பார்க்கப்படும் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முதலமைச்சரின் மருமகன் சபரீசன் கொடுத்த அசைன்மெண்டை அமைச்சர் எ.வ.வேலு கச்சிதமாக முடித்துக் கொடுக்க, ஒரு வழியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு பழம் நழுவி பாலில் விழுந்திருக்கிறது.

* அரசியல் தான் எவ்வளவு விசித்திரம்
* தேமுதிகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறை
* பழம் நழுவி பாலில் விழ இருக்கிறது - கருணாநிதி


கடைசி வரைக்கும் கலைஞர் கருணாநிதியை தீவிரமாக எதிர்த்து வந்த கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய கட்சி, இன்று திமுக கூட்டணியிலேயே ஐக்கியமாகியிருப்பதை பார்க்கும் போது, அரசியல் தான் எவ்வளவு விசித்திரம் என்று தான் யோசிக்க வைக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் பயணித்த தேமுதிக, வருகிற தேர்தலுக்கு திமுகவுடன் கை கோர்த்திருக்கிறது. தேமுதிகவின் அரசியல் வரலாற்றில் திமுகவுடன் கூட்டணி வைப்பது இதுவே முதன் முறையாகும். ஏனென்றால், கேப்டன் விஜயகாந்த் இருந்த போது, திமுக உடனான கூட்டணியை அறவே ஏற்காமல் ஒதுக்கி வந்தார். 2011 தேர்தலுக்கு பிறகு, ஜெயலலிதாவுடன் கருத்து முரண் ஏற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த். அதற்கு அடுத்து வந்த 2016 தேர்தலில் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டு வர எவ்வளவோ முயன்றார் கலைஞர் கருணாநிதி. பழம் நழுவி பாலில் விழ இருக்கிறது என நம்பிக்கையோடு இருந்தார் கருணாநிதி.

* திமுக உடனான கூட்டணியை விரும்பாத கேப்டன்
* விஜயகாந்த் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி
* ஒட்டும் இல்லாமல், உறவும் இல்லாமல்


ஆனால், திமுக உடனான கூட்டணியை விரும்பாத கேப்டன் விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி னார். விஜயகாந்த் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி 2016 தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து 2ஆவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்க உதவியது. நடிகராக இருந்த போதில் இருந்தே தமிழீழம் மீது ஆர்வம் கொண்ட விஜயகாந்த், ஈழ படுகொலைக்கு காரணம் என்பதாலேயே திமுக - காங்கிரஸுடன் ஒட்டும் இல்லாமல், உறவும் இல்லாமல் இருந்தார். ஆனால், இன்று விஜயகாந்த் தொடங்கிய கட்சி, கடைசியில் காங்கிரஸ் இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே ஐக்கியமாகியிருக்கிறது.

* கலைஞர் மறைவு, கதறி அழுத விஜயகாந்த
* விஜயகாந்த் மறைவு, திமுக அரசு ஏற்பாடுகள்
* தேமுதிகவினர் இடையே திமுக மீது SOFT CORNER


என்ன தான் ஆரம்பத்தில் திமுகவுக்கும், தேமுதிகவுக்கும் ஒத்து வராமல் இருந்தாலும், கலைஞர் மறைவின் போது அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், கண்ணீருடன் தேம்பி தேம்பி அழுத வீடியோ, திமுகவினருக்கு இருந்த பழைய பகையை மறக்க வைத்தது. அதேபோல, விஜயகாந்த் மறைவின் போது இறுதி சடங்கிற்கு திமுக அரசு செய்து கொடுத்த ஏற்பாடுகள், தேமுதிகவினர் இடையே திமுக மீது SOFT CORNER ஏற்பட காரணமாக இருந்தது.

* தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்தது யார்?
* எ.வ.வேலு வீட்டிலேயே வைத்து எல்.கே.சுதீஷ் பேச்சு வார்த்தை
* பாமகவில் தந்தை - மகன் இடையேயான பிரச்சனை


இந்த சூழலில் தான், தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்தது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தேமுதிகவுடன் ஆரம்பத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடங்கி அறிவாலயத்திற்கு அழைத்து வந்தது வரை அமைச்சர் எ.வ.வேலு தான் கவனித்துக் கொண்டதாக சொல்கிறார்கள். ஐந்தாறு முறைக்கு மேல் எ.வ.வேலு வீட்டிலேயே வைத்து எல்.கே.சுதீஷ் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். அதோடு, முதலமைச்சரின் மருமகன் சபரீசனும், தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர முடிவோடு இருந்ததாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு வட மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்ற நிலையில், ஏற்கனவே அங்கு வலுவாக இருக்கும் இன்னொரு கட்சியான பாமகவில் தந்தை - மகன் இடையேயான பிரச்சனை மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது சாதகமாக இருக்கும் என்ற அடிப்படையில் சபரீசன் KEY கொடுக்க, எ.வ.வேலு அசைன்மெண்டை முடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

* காங்கிரஸுக்கு திமுக செக் வைக்கும் ஐடியா
* 40க்கும் மேல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு
* திமுக - தேமுதிக இடையேயான கூட்டணி

இன்னொரு பக்கம், தேமுதிகவை கொண்டு வந்தது, காங்கிரஸுக்கு திமுக செக் வைக்கும் ஐடியாவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 40க்கும் மேல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் முரண்டு பிடித்து வரும் நிலையில், புதிய கட்சிகளை கொண்டு வந்தால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாத சூழலும் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. கேப்டன் கட்சி தொடங்கிய காலத்தில் வடிவேலுவை வைத்து மேடை மேடையாக பேச வைத்து விஜயகாந்த் மீது விமர்சனங்களை அள்ளி தெளித்து அவமானப்படுத்தியது திமுக. அதேபோல, விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதாவும் திமுக மீது கடும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இருப்பினும் கூட திமுக - தேமுதிக இடையேயான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.

* காரணம் ராஜ்ய சபா சீட்டு
* 10 ஆண்டுகளுக்கு பிறகு பழம் நழுவி பாலில்...
* பழச்சாறாக மாறுமா? அல்லது பாழாய் போகுமா?


எல்லாவற்றுக்கும் காரணம் ராஜ்ய சபா சீட்டு தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதிமுக ராஜ்ய சபா சீட்டு கொடுக்காமல் ஏமாற்றியதும் முதுகில் குத்தி விட்டார்கள் என பூத் கமிட்டி கூட்டத்தில் கொந்தளித்திருந்தார் பிரேமலதா. இந்த நிலையில் தான், ராஜ்ய சபா என்ற தூண்டிலை வைத்து தேமுதிக என்ற மீனை சிக்க வைத்திருக்கிறது திமுக. இருப்பினும் கூட தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் கனவுடன் இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக களமாடிய விஜயகாந்தின் அரசியல் பயணத்தை, ஒரு ராஜ்ய சபா சீட்டுக்குள் பிரேமலதா சுருக்கி விட்டதாக விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பழம் நழுவி பாலில் விழுந்திருக்கிறது. ஆனால், பிரேமலதாவின் முடிவை தேமுதிக தொண்டர்களான கேப்டன் சொந்தங்கள் எந்த அளவுக்கு முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது பாலில் விழுந்த பழம் தித்திப்பான பழச்சாறாக மாறுமா? அல்லது பாழாய் போகுமா? என்பது.

Related Link
திமுக கூட்டணியில் தேமுதிக

திமுக கூட்டணியில் தேமுதிக

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved