மணிகண்டன் நடிப்பில் வெளியாகவுள்ள குடும்பஸ்தன் படத்தின் 'காத்து நம்ம பக்கம்' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.