Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், திங்கட்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், எஸ்.தமன் இசையமைப்பில், பணத்தை மையமாக வைத்து, ஆக்சன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் டைட்டில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.