Also Watch
Read this

11 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடம் பிடித்துள்ளது. பிளேஆஃப் வாய்ப்பை குஜராத் டைட்டன்ஸ் வலுப்படுத்தி உள்ளது.
ஐபிஎல்-2026 இறுதிக்கட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் அணிகளுக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்துள்ளது. 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் GT இரண்டாம் இடத்தில் உள்ளது.

முதலிடத்தில்...
இந்த சீசனில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் SRH அணி, +0.737 என்ற சிறந்த ரன் ரேட்டால் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அதேசமயம், சமீபத்திய வெற்றியால் உற்சாகம் பெற்றுள்ள GT அணி +0.228 ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் சில போட்டிகள் மீதமுள்ளதால், அந்த அணி முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில்...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அதே 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. RCB அணியின் +1.234 என்ற வலுவான ரன் ரேட், அந்த அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் எங்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 9 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருப்பதால், பிளேஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
டெல்லி கேபிடல்ஸ் (DC), மும்பை இந்தியன்ஸ் (MI), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகள் கீழ் நிலைகளில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக MI மற்றும் LSG அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடைசி இரு இடங்களில் உள்ளதால், அவர்களின் பிளேஆஃப் கனவு மங்கி உள்ளது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது. முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் யாவை என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.