news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெகவை நெருங்கும் விசிக, கம்யூ? பழைய வீடியோக்களால் சிக்கல்
tv

Also Watch

tv

Read this

தவெகவை நெருங்கும் விசிக, கம்யூ? பழைய வீடியோக்களால் சிக்கல்

விமர்சனங்களால் சங்கடத்தில் சகாக்கள்

22

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கலாமா? வேண்டாமா? என்று, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் முடிவை இன்று அறிவிக்கும் நிலையில், அக்கட்சி தலைவர்கள் தேர்தலுக்கு முன் விஜயை விமர்சித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

வைரல் ஆகும் வீடியோக்கள்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததை போல, ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாமல் அல்லோலப்பட்டு வருகிறது தவெக. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடும் தவெக, ஆதரவு தேடி விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அணுகியிருக்கும் சூழலில், அக்கட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு விஜயை விமர்சித்த வீடியோக்கள் இணையத்தில் திடீர் வைரலாகி தொண்டர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது.

ஆட்சி அமைக்க திணறும் தவெக
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை திமுகவை விட அதிகம் விமர்சித்தது அதன் கூட்டணிக் கட்சிகளே. ஆரம்பத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் முழக்கத்தை ஏகமனதாக வரவேற்ற திமுக கூட்டணி கட்சிகள், பின்னர் திடீரென சைலண்ட் மூடிற்கு சென்று விஜயையே விமர்சிக்க தொடங்கி விட்டன. இந்நிலையில், தேர்தல் ஓய்ந்து முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்காமல் திணறி வருகிறது.

ஆதரவு கோரிய தவெக
மே 7ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த நிலையில், பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்துவைப்பேன் என ஆளுநர் கறார் காட்டியதால் விழா தள்ளிப் போனது. திமுக கூட்டணியில் இருந்து கழண்டுவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாது என்பதால், திமுக கூட்டணியில் மீதமிருக்கும் விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இமெயில் வாயிலாக அணுகியது தவெக. ஆனால் அந்த கட்சிகள் நேரம் தாழ்த்தவே நேரடியாகவே தவெக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

கடுமையாக விமர்சித்த திருமாவளவன்
இந்த மூன்று கட்சிகளும் தங்களுடைய முடிவை விரைந்து அறிவிப்பதாக கூறியிருக்கும் நிலையில், அதன் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு விஜயை விமர்சித்த காணொலி வைரலாக தொடங்கி உள்ளன. அதிலும் விசிக தலைவர் திருமாவளவன், விஜயை பாஜகதான் இயக்குவதாக சந்தேகித்து பல இடங்களில் பேசிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை செய்தது பற்றிய அவரது விமர்சனம், விசிலடிப்பவர்களுக்கு சட்டமன்றத்தில் இடமில்லை என அப்போதைய முதலமைச்சர் முன்னிலையில் பேசியது போன்ற அனைத்து வீடியோக்களும் இணையத்தில் தீயாய் பரவுகிறது.

பேசுபொருளான காணொலிகள்
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பேசியதும் இணையத்தை திடீரென ஆக்கிரமித்துள்ளது. இதுதவிர தவெகவினரும் அப்போதைய சூழலில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்து பதிவிட்ட பதிவுகளும் இப்போது டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசியலின் திக் திக் நிமிடங்களுக்கு மத்தியில் இணையத்தை ஆக்கிரமித்துள்ள இவ்வகையான காணொலிகளும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.

Related Link
இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்

இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் - தம்பிதுரை சூசக பதில்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

9
40 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau