Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில், மெட்ரோ ரயில் மூலம், ஒரு இதயம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம், பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு மனித உறுப்பு, வெற்றிகரமாக கொண்டு செல்லப்படுவது, இரண்டாவது முறையாகும்.
யஷ்வந்த்பூர் ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து, சேஷாத்ரிபூர் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. யஷ்வந்த்பூர் இன்டஸ்ட்ரி மெட்ரோ நிலையத்திலிருந்து சம்பிஜ் சாலை நிலையத்திற்கு மெட்ரோ மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து, யஷ்வந்த்பூர்-க்கு ஆம்புலன்ஸ் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், சேஷாத்ரிபூர் அப்பல்லோ மருத்துவமனைக்கு இதயம் மாற்றப்பட்டது.
இதயத்தை எடுத்துச் செல்வதற்காக, மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் இயங்கும் பயணிகள் ரயிலில் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 11.1க்குப் புறப்பட்ட ரயில், இரவு 11.21க்கு சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்தை அடைந்தது. யஷ்வந்த்பூர் - சம்பிஜ் மெட்ரோ நிலையத்திற்கும் இடையில் ஏழு மெட்ரோ நிலையங்கள் உள்ளன. யஷ்வந்த்பூரில் இருந்து சம்பிஜ் சாலை மெட்ரோ நிலையத்தை அடைய 20 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அப்போது மெட்ரோ பாதுகாப்பு அதிகாரிகளும் மருத்துவர்களும் உடனிருந்தனர்.