Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரிஷா வழக்கறிஞர் அறிக்கை
நடிகை திரிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் வெளியிட்ட அறிக்கை;
மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற வெறுக்கத்தக்க, பொருத்தமற்ற ஒரு கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
திரிஷா, எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. அதனால் இதுபோன்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். கடந்த காலங்களைப் போலவே திரிஷா அரசியலில் நடுநிலையுடன் இருக்க விரும்புகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை
தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நடிகை திரிஷாவுக்கு தேவையில்லாத இதுபோன்ற விஷயங்களில் அவரது பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
