Also Watch
Read this
Posted on: Jan 24, 2025 08:53 AM
By: Srini Vasan

கார் உற்பத்தியில் முன்னிணி நிறுவனமாக திகழும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எலக்ட்ரிக் பேட்டரியில் இயக்கும் மூன்று சக்கர வாகனம் மற்றும் மைக்ரோ நான்கு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
டெல்லி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் இந்த வாகனங்களின் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து கூறிய ஹூண்டாய் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் உள்நாட்டிலிலேயே 3 சக்கர வாகனங்களை உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தது குறிப்பிடதக்கது.
.png)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved