ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கும் பாஜக பிரமுகர் அஞ்சலையின் மகள் தமிழரசி, தங்களை அணு அணுவாக சித்ரவதை செய்வதாக, பாதிக்கப்பட்ட திருநங்கைகள் கூட்டமாக சென்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டியை வசூலிக்க தனது ஆசைநாயகன் டாட்டூ மணியை தமிழரசி கைக்குள் வைத்துள்ளதாக கூறும் திருநங்கைகள், இதற்குமேல் நிர்வாணமாக நின்று பாவத்தை கொட்டிக்கொள்ள விருப்பவில்லை என வருத்தம் தெரிவித்தனர்..வடசென்னையில் வலம்வந்த சின்னா என்ற ரவுடியுடன் ஏற்பட்ட முட்டல், புளியந்தோப்பு B கேட்டகரி பெண் தாதாவும், பாஜக பிரமுகருமான அஞ்சலைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதையறிந்த ஆற்காடு சுரேஷ், அஞ்சலைக்காக சின்னாவை கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்து பாப்புலர் ரவுடியானார். அதில் இருந்தே ஆற்காடு சுரேசுக்கு தனி கவனிப்பு கொடுத்து வந்த அஞ்சலை, அவரது பெயரை பயன்படுத்தி கந்துவட்டியிலும் ஸ்ட்ராங்காக கால்பதித்தார்.. இதனிடையே ஆற்காடு சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டதோடு அதன் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங்க் உள்ளதாக தகவல் கிடைத்தது.இதனால் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட தன் பங்குக்கு சில லட்சங்களை வாரி இறைத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுடன் கைகோர்த்தார் அஞ்சலை. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். இந்நிலையில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி போல், அஞ்சலையின் மகள் தமிழரசி , தங்களை அடிமைபோல் நடத்துவதாக புலம்பும் திருநங்கைகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் கொடுத்துள்ளனர்..கந்துவட்டி, மீட்டர்வட்டி என வட்டிக்குமேல் வட்டி போட்டு அந்த வட்டியையும் குட்டிபோட வைத்து தங்களை நகரவிடாமல் முடக்கி வைப்பதாக கூறும் திருநங்கைகள், வட்டி கொடுக்காதவர்களின் வீட்டுக்கு, தமிழரசி தனது ஆசைநாயகன் டாட்டூ மணியுடன் சென்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்..டாட்டூ மணிக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில், வட்டி பணத்தை வசூலிக்க, அவரை தமிழரசி தனது கைக்குள் போட்டு வைத்துள்ளதாக கூறும் திருநங்கைகள், பணம் சரிவர கொடுக்க இயலாதவர்கள் வீட்டின் முன்பு தங்களை நிர்வாணமாக நிற்க வைப்பதாகவும் இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களை செய்து பாவத்தை கொட்டிக்கொள்ள முடியாது எனவும் கூறினர்..