news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நீக்கம் செய்ததை தடை விதிக்க முடியாது - நீதிபதிகள்
tv

Also Watch

tv

Read this

நீக்கம் செய்ததை தடை விதிக்க முடியாது - நீதிபதிகள்

சென்னை

30

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
hc 1

தேர்தல் ஆணையம் பதிவு பட்டியலிலிருந்து நீக்கியதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததை தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் நீக்கம் செய்தது.

தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கம்

இவற்றில் தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன. பதிவு நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து
மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை

இந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா,நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். கட்சிகளின் பதிவுகளை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியலமைப்பு சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் வாதத்தின் போது குறிப்பிட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் தேர்தல் ஆணையர்கள் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

நடந்து முடிந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் பங்கேற்றதாகவும், கட்சிகளின் அங்கீகாரத்தை வேண்டுமானால் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியும் என்றும் பதிவை நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என வாதிட்டனர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் போட்டியிடவில்லை என்றும் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததால் செய்யப்பட்டதாக வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Link
டெட் (TET) தேர்வு இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்.

டெட் (TET) தேர்வு இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 29 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau