இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேச அரசு, ஷேக் ஹசீனா சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடாமல் இருக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவின் கொலை முயற்சி குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளது.