ஆல் டைம் ரெக்கார்டு செய்த ஜனநாயகன்ஹெச்.வினோத் இயக்கத்துல தளபதி விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் தான் ஜனநாயகன். நடிகர் விஜய் முழு நேர அரசியல்ல ஈடுபடப்போகும் நிலையில இதுதான் விஜயின் கடைசி படமாக இருக்கும்னு சொல்றாங்க.. இதனால மிகப்பெரிய எதிர்பார்ப்பு படம் மேல நிலவுது. அனிருத் மியூசிக்ல, கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்புல உருவாகும் இந்த படத்தோட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றிருந்தது. அரசியலுக்கு புதுசா வந்திருக்கும் விஜய்யின் தற்போதைய நிலையை போலவே, ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைஞ்சிருந்துச்சி. இந்தப் படத்துல அரசியல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில, இந்தப் போஸ்டர் மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கு. இந்த நிலையில இந்த படத்தோட ஓவர்சீஸ் ரைட்ஸ் 75 கோடிக்கு விற்கபட்டிருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. இதுவரை கோலிவுட்ல இத்தகைய விலைக்கு எந்த ஒரு தமிழ்ப்படமும் பண்ணாத சாதனைய ஜனநாயகன் திரைப்படம் செய்து ஆல் டைம் ரெக்கார்டு செஞ்சிருக்குசர்ச்சையை கிளப்பிய பேட் கேர்ள் டீசர் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில, இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில உருவாகியுள்ள 'பேட் கேர்ள்' படத்தின் டீசர வச்சே சமூக வலைதளங்கள்ல கடும் விவாதம் கிளம்பியிருக்குது. அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்கிற படத்தை தயாரிச்சிருக்காங்க. இந்த படத்த வெற்றி மாறனோட உதவி இயக்குநரா பணிபுரிந்து வந்த வர்ஷா பரத் இயக்கியிருக்காங்க. படத்துல அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க.இந்த படத்தோட டீசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாச்சு. இந்த நிலையில டீசர் ஒரு பெண்ணோட பதின்பருவத்தில் இருந்து தனது முப்பது வயதைத் தொடும் காலம் வரையிலான வாழ்க்கையை பேசுவதாக இருக்கு. இந்த நிலையில படத்தோட டீசரை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டிருந்த இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவ பாராட்டியிருந்தாரு. இவரது பதிவ ரீ ட்வீட் செய்திருந்த இயக்குநர் மோகன் ஜி, ”ஒரு பொண்ணோட தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த கும்பலுக்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாகதா இருக்கும் , இது போன்ற படங்கள இயக்கி உங்க குடும்பத்தாரிடம் காட்டுங்க” என காட்டமாக பதிலளிச்சிருக்காரு. இதையடுத்து இந்த டீசரை முன்வச்சி கடும் விவாதங்கள் கிளம்பியதைத்தொடர்ந்து, டீசரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வெற்றிமாறன் மேல கோபத்தை கக்கிட்டு வர்றாங்க.. விஜய் ஆண்டனியின் 25 வது பட அப்டேட் பன்முக திறமைக் கொண்ட விஜய் ஆண்டனி, தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டு சினிமாவுல பயணிச்சி வந்துட்ருக்காரு. இவரது நடிப்புல கடைசியா வெளியான ஹிட்லர் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்துச்சி. இந்த படத்த தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களின் படங்கள்ல கமிட்டாகியிருக்காரு. இப்படி பிசியான நடிகரா வலம் வரும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில தனது 25 வது படத்துல நடிச்சி வந்துட்ருக்காரு. மாஸ் ஆக்ஷன், ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த படத்துல சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு அவரே இசையமைக்கிறாரு.இந்நிலையில, விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் வெளியாகியிருக்கு. அதன்படி இந்த படத்துக்கு சக்தி திருமகன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கு. படத்தோட postproduction பணிகள் விறுவிறுப்பா நடைபெற்று வரும் நிலையில படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுது.விஜய் சேதுபதி மகளை தாக்கிப்பேசும் நெட்டிசன்ஸ் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் தயாரித்துள்ள பேட் கெர்ல் படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில இந்த டீசரை பகிர்ந்த விஜய் சேதுபதியின் மகளை நெட்டிசன்கள் வறுத்தெடுப்பது சர்ச்சைய கிளப்பியிருக்கு. மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்சேதுபதி தொடர்ந்து தரமான படங்கள்ல நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்துட்ருக்காரு. இவரது நடிப்பில கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் செம மாஸ் வசூல் வேட்டையை நடத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோவையும் தொகுத்து வழங்கியிருந்தாரு விஜய் சேதுபதி. இந்த நிலையில சமீபத்தில அவர் தனது டுவிட்டர் பக்கத்துல Bad Girl பட டீஸர வெளியிட்டதைத்தொடர்ந்து பலரும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. ஏற்கனவே படத்தை தயாரித்த வெற்றிமாறன் மட்டுமில்லாம படத்தின் டீசரை பதிவிட்டு வரும் அனைவரையும் நெட்டிசன்கள் தாக்கி வரும் நிலையில, பேட் கேர்ல் டீசரை பகிர்ந்த விஜய் சேதுபதியை, ”உங்கள் மகள் இதே மாதிரி செய்தால் புரியும்” என குறிப்பிட்டு இணையத்தில் பதிவிட்ருக்காங்க. இதை பார்த்த மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா, டீஸர் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆனா ஒருவரின் குடும்பத்தை விமர்சிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என பதிவிட்டு கோபத்த வெளிப்படுத்தியிருக்காரு. பாலிவுட்டிலும் சேட்டை செய்யும் பூஜா ஹெக்டேபீஸ்ட் படத்தில விஜய்யுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை பூஜா ஹெக்டே, தளபதியின் 69வது படமான ஜனநாயகன் படத்திலும் கமிட்டாகி நடிச்சி வந்துட்ருக்காங்க. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில, ஹிந்தியில ஷாகித் கபூருக்கு ஜோடியாக 'தேவா' என்கிற படத்திலும் நடிச்சிருக்காங்க பூஜா ஹெக்டே. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் இந்த படத்துல ஷாகித் கபூர் கதாநாயகனாக களமிறங்கிருக்காரு. மேலும், இந்த படத்துல, பவைல் குலாட்டி, கிரிஷ் குல்கர்னி, குப்ரா சைட் மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் வரும் 31ந்தேதி வெளியாக இருக்கும் நிலையில, இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர்,படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே படு நெருக்கமாக இருந்த முத்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருந்தாங்க. அதோடு படத்தில இடம்பெற்றுள்ள சில ஆபாச வசனங்கள் மற்றும் சில காட்சிகளை மாற்றுமாறும் கூறியிருக்காங்க. அதை ஏத்துக்கிட்ட படக்குழு படத்துல உள்ள முத்தக்காட்சிகள கத்திரிப்போட்டு தூக்கியிருக்கு. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ கொடுத்துருக்கு.தெறிக்கும் அரசியலில் களமிறங்கிய ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது நடிப்பில கடைசியாக வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்துச்சு. ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில நடிச்சி வந்துட்ருக்காரு. இதற்கிடையே ரவி மோகன், டாடா பட இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில, தனது 34 வது படத்துல நடிச்சி வந்துட்ருக்காரு. இந்த நிலையில இந்த படத்தோட டைட்டில படக்குழு வெளியிட்ருக்கு. அதன்படி, இந்த படத்துக்கு கராத்தே பாபு என பெயரிட்டுள்ள படக்குழு டீசரயும் வெளியிட்ருக்கு. அதுல யாரும் எதிர்பார்க்காத வகையில வித்தியாசமா சட்டப்பேரவையில நடக்கும் காட்சிகளை மையமாக வைத்து டீசர் வெளியாகி இருக்கு. இந்த டீசரில் நடிகர் ரவி மோகன் பேசும் வசனங்கள் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.வெடித்த சர்ச்சை.. நீக்கப்பட்ட பிரச்னைக்குரிய காட்சி புஷ்பா2 பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா இயக்குனர் லக் ஷ்மன் உடேகர் இயக்கத்தில உருவாகி வரும் சாவா படத்தில நடிச்சி வந்துட்ருக்காங்க. இந்த படத்தில இவருக்கு ஜோடியா பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிச்சிருக்காரு. சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வச்சு உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 14 - ம் தேதி வெளியாக இருக்கு. ஏற்கனவே படத்தோட ட்ரெய்லர் வெளியான நிலையில படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே சர்ச்சைய ஏற்படுத்தியிருக்கு. அதன்படி மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான 'லெசிம்' உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடும் காட்சிக்கு எதிரா நெட்டிசன்கள் மத்தியில கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில அந்த காட்சியை படத்திலிருந்து படக்குழு நீக்கியிருக்கு.https://www.youtube.com/embed/AIhjTfX_x4E