தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நகர தலைவர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நிர்பந்திப்பதாக வெளியான வாட்ஸ் அப் குறுஞ்செய்தி தொடர்பாகவும் விவாதிக்கப்பட கூடும் என தெரிகிறது.