news-tamil-logo

3/18/2026, 11:49:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,360
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,360

ஒரு கிராம் வெள்ளி ரூ.270

Posted on: Feb 20, 2026 06:03 AM

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 640 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்த மாத விலை நிலவரம்
கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,900, ஒரு சவரன் ரூ.1,19,200 ஆக விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கத்தின் விலையில், ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.
கடந்த 10ஆம் தேதி, ஒரு கிராம் ரூ.14,580, ஒரு சவரன் ரூ.1,16,640 ஆக இருந்தது.
11ஆம் தேதி சற்று விலை அதிகரித்து, ஒரு கிராமுக்கு ரூ.210ம், ஒரு சவரனுக்கு ரூ.1,680ம் உயர்ந்தது. இதையடுத்து தங்கத்தின் விலையில் சிறிய அளவு மாற்றம் காணப்பட்டு விற்பனை ஆனது. கடந்த 14ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து, ரூ.1,16,480க்கும் விற்பனை ஆனது.

பிப்.17ஆம் தேதி விலை சரிவு
ஒரு கிராமுக்கு ரூ.120ம், ஒரு சவரனுக்கு ரூ.960ம் குறைந்தது. ஒரு கிராம் ரூ.14,320க்கும், ஒரு சவரன் ரூ.1,14,5600க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை ஆனது.

பிப்.18ஆம் தேதி
ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,840க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகி ஆனது.

பிப்.19 தங்கம் விலை ரூ.2160 உயர்வு
சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.270 உயர்ந்து ரூ.14,500க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்தது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000க்கு விற்பனை ஆனது.

பிப்.20 தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 14,420 ரூபாயாக இருந்தது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை.

விலையில் ஏற்ற, இறக்கம்

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது.

கடந்த நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை:

15.02.2026 - ரூ 1,16,480
16.02.2026 - ரூ 1,15,520
17.02.2026 - ரூ.1,14,560
18.02.2026 - ரூ.1,13,840
19.02.2026 - ரூ.1,16,000
20.02.2026 - ரூ.1,15,360

Related Link
AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்

AI - அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பாய்ச்சல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved