மும்பை வாங்கடே ஸ்டேடியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தி பாடலுக்கு நடனமாடியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. வாங்கடே ஸ்டேடியம் கட்டப்பட்டு 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில் மும்பை கிரிக்கெட் வாரியம் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓம் சாந்தி ஓம் என்ற பாலிவுட் பாடலுக்கு சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடிய வீடியோ ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.