Also Watch
Read this
By: Web Team

குளித்தலையில், போலீசார் வாகன சோதனையின் போது, 1 1/4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சரவணகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உழவர் சந்தை புறவழிச் சாலையில் அதி வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் நியாய விலை கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் அரிசி மூட்டைகளை கடத்தியது தெரிய வந்தது. சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பஞ்சப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் தங்களது கால்நடைக்கு வாங்கி சென்றதாக தெரிவித்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர். குளித்தலையில், ரேஷன் அரிசிகளை கோழி பண்ணைகளுக்கும், அரிசி ஆலைகளுக்கு கடத்தி, நவீனப்படுத்தி பின்னர் பொதுமக்களுக்கு புதிய சாக்கு பையில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.