அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரர் தனது 10 ஒலிம்பிக் பதக்கங்களையும் இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸை நாசமாக்கிய இந்த காட்டுத்தீயில் தான் சந்தித்த பேரழிவு மற்றும் தனிப்பட்ட இழப்புகளை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் நீச்சல் வீரர் கேரி ஹால் ஊடகத்துக்கு வேதனையுடன் தெரிவித்துள்ளார். வேகமாக பரவிய காட்டு தீ, பசிபிக் பாலிசேட்ஸில் உள்ள தனது வாடகை வீடு, தனது பத்து ஒலிம்பிக் பதக்கங்கள், தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த நீச்சல் குளம் மற்றும் அவரது பெரும்பாலான உடைமைகளையும் அழித்ததாக வேதனைத் தெரிவித்தார்.