Also Watch
Read this
By: Web Team

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 2024 பொதுத் தேர்தலுக்காக மட்டுமே இந்தியா கூட்டணி உருவானதாகவும், தற்போது காங்கிரசும், பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும், ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்.
இனி வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியன பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் அரசுக்கு கடிதம் எழுதின.
ஆனால் அதில் இணைந்து கொள்ளாமல் ஆம் ஆத்மி தனியாக கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.