கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தண்ணீரை தாங்கியபடி அமர்ந்திருந்தனர். கேரளாவில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோர் தாக்கப்படுவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீஸ் ராஜியம் நடப்பதாகவும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகக் கோரியும் மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.