வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்று என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதார தோல்விகள், உணவு, தண்ணீர் பற்றாக்குறை, பணவீக்கம், அடக்குமுறை வரிகள் மற்றும் சமூக நலன்கள் ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு காரணமாவதாக தெரிவித்தார். மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பிலிருந்து நிர்வாகம் தொடங்க வேண்டும் என தெரிவித்த அஜித் தோவல், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வழங்கப்பட வேண்டும், அதுதான் ஒரு அரசின் முதல் பொறுப்பு என்றார்.