Also Watch
Read this
By: Manigandan Raja

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி :
பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக வரும் 25-ம் தேதி இஸ்ரேல் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய கூட்டணி உள்ளதாகவும், அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் பற்றி இருவரும் விவாதிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல எனவும், 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்தியா மிகவும் சக்திவாய்ந்தது, மிகவும் பிரபலமானது எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved