Also Watch
Read this
By: Web Team

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்ட சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதனால் ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து பேருந்து மீட்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டாவது முறையாக இது போன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலார்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படியுங்கள் : குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட உடல் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்கவில்லை என புகார்