Also Watch
Read this
By: Web Team

ராஜஸ்தான் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 5 பேரை, ஆசிரியர்கள் இணைந்து விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் மக்களை கவர்ந்துள்ளது.
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியிருந்த தலைமை ஆசிரியர், சொன்னதை போலவே மற்றொரு ஆசிரியருடன் இணைந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து மாணவர்களை விமானத்தில் Diu-Damanக்கு அழைத்து சென்றார்.
இதற்கு முன்னரும் பாராட்டு விழா நடத்தி வெள்ளி நாணயம் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். இருவரின் முயற்சியால் அப்பள்ளியில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது...