கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சாலையோர உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வெட்சிறை சுங்கச்சாவடி அருகே செயல்பட்டு வந்த உணவகத்தில், திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் இரு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. உணவகத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.