MLA சந்துரு லமனி கைது : கர்நாடகாவில் வேளாண் பணிக்கான ஒப்புதலுக்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ சந்துரு லமனியை லோக் ஆயுக்தா போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கடக் மாவட்டம் சின்சலியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய், வேளாண் துறையின் பணிகளுக்காக ஷிரகட்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சந்துரு லமனியை அணுகியபோது அவர் 11 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக லோக்ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்கள் வழங்கிய அறிவுரையின் பேரில் ஒப்பந்தாரர் விஜய், எம்எல்ஏவின் மருத்துவமனையில் வைத்து அவரிடம் 5 லட்சம் ரூபாயை வழங்கியபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர் . அவரது 2 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். Related Link லாரி மோதி குழிக்குள் தூக்கி வீசப்பட்ட பைக்