news-tamil-logo

3/18/2026, 11:51:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews வீட்டில் தனியாக இருந்த பெண் IT ஊழியர்
tv

Also Watch

tv

Read this

வீட்டில் தனியாக இருந்த பெண் IT ஊழியர்

ஹைதராபாத், தெலங்கானா

Posted on: Feb 20, 2026 11:22 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அப்பார்ட்மெண்ட்டில் இருந்து கேட்ட பெண்ணின் அலறல் சத்தம். ரத்தம் படிந்த கத்தியுடன் மின்னல் வேகத்தில் தப்பியோடிய இளைஞர். வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த IT பெண் ஊழியர். சிம் கார்டை வைத்து கொலையாளியை தட்டி தூக்கிய காவல்துறையினர். 3 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கிழித்த கொடூரன் யார்? பின்னணி என்ன?

* பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிய மக்கள்
* பெண்ணின் வீட்டிற்குள் இருந்து தப்பியோடிய இளைஞர்
* இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி


ஹைதராபாத் வனஸ்தலிபுரத்துல இருக்குற அப்பார்ட்மெண்ட்ல இருந்து ஒரு பெண்ணோட அலறல் சத்தம் கேட்டுருக்கு. உடனே அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்ன ஏதுன்னு ஓடிப்போய் பாத்திருக்காங்க. அப்ப, பெண்ணோட அலறம் சத்தம் கேட்ட அந்த வீடு, உள் பக்கமா தாழ்ப்பாள் போட்டுருந்துச்சு. எதுக்காக இந்த பெண் இப்படி கத்துறாங்க, என்னாச்சு தெரியலேயேன்னு குழம்பி போய் நின்னுட்டு இருந்தப்ப, அந்த வீட்டுக்குள்ள இருந்து, ஒருத்தன் கத்தியோட மின்னல் வேகத்துல தப்பிச்சு ஓடிருக்கான். அத பாத்ததும் அதிர்ச்சியான மக்கள் சிலர், வீட்டுக்குள்ள போய் பாத்தப்ப, அங்க சுனிதா-ங்குற பெண் ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்துருந்துருக்காங்க.

* சுனிதா சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
* குற்றவாளி யார் என விசாரணை
* சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார்


அடுத்து விஷயம் தெரிஞ்சு, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரங்க, சுனிதாவோட சடலத்த கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. சுனிதாவ கொலை பண்ணது யாரு? எதுக்காக இந்த கொலை நடந்துச்சுன்னு விசாரிக்க ஆரம்பிச்ச காவலர்கள், முதல்ல சம்பவம் நடந்த வீட்ட ஆய்வு பண்ணாங்க. அப்போ, ரத்தம் படிஞ்ச செல்போன் ஒன்னு சிக்கிருக்கு. அத கைப்பற்றுன போலீஸ்காரங்க, மக்கள் சொன்ன அங்க அடையாளங்கள வச்சு அந்த ஏரியாவுல இருக்குற சிசிடிவி கேமராக்கள ஒன்னுவிடாம செக் பண்ணாங்க. அதுல, சுனிதாவ கொலை செஞ்சிட்டு தப்பிச்சு போனவன், ஒரு ஆட்டோ புடிச்சு எஸ்கேப் ஆனது பதிவாகிருந்துச்சு.

* சிம் கார்டை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
* நண்பனின் நம்பரை வைத்து விசாரணை
* காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை


அதுக்குப்பிறகு, சுனிதா வீட்டுல இருந்து கைப்பற்றுன கொலையாளியோட சிம் கார்டு டீடைல்ஸ வச்சு அவன் கடைசியா யாருக்கெல்லாம் ஃபோன் பண்ணான்னு செக் பண்ணாங்க. அதுல, அவன் தன்னோட ஃபிரண்ட் ஒருத்தருக்கு ஃபோன் பண்ணிருந்தது தெரிஞ்சிருக்கு. அடுத்து, அந்த நம்பர ட்ரேஸ் பண்ணி அவனோட ஃபிரண்ட பிடிச்சு விசாரிச்சதுல தான், சுனிதாவ கொலை செஞ்சவன போலீஸ் மடக்கி பிடிச்சு விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரணை பண்ணாங்க. அதுலதான், பல திடுக்கிடும் தகவல்களாம் வெளியவந்துச்சு.

* ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுனிதா
* 2022ல் திருமணம் செய்து கொண்ட சுனிதா-மகேஷ் தம்பதி
* மனைவி சுனிதா மீது மகேஷுக்கு ஏற்பட்ட சந்தேகம்


தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்த சேர்ந்த 30 வயசான சுனிதா, ஐடி கம்பெனியில சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை பாத்துட்டு இருந்தாங்க. இவங்களுக்கும், மகேஷ்-ங்குறவனுக்கும் கடந்த 2022-ல கல்யாணம் நடந்திருக்கு. ஆரம்பத்துல நல்லபடியா போயிட்டு இருந்த இவங்க வாழ்க்கையில, சந்தேகங்குற புயல் வீச ஆரம்பிச்சிருக்குது. வெளிநாட்டுல வேலை பாத்துட்டு வந்த மகேஷ், ஆறு மாசத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாராம். அப்படி வரும்போதெல்லாம், நான் வெளிநாட்டுல இருக்கேன் நீ வேற யார்க்கிட்டயோ பேசி பழகிட்டு இருக்கன்னு சொல்லி மனைவிகிட்ட சண்ட போடுவாரம். கடந்த சில மாசமாவே, மகேஷுக்கும், சுனிதாவுக்கும் இடையில தகராறு நடந்துட்டு இருந்ததா சொல்லப்படுது. மனைவியோட நடத்தையில சந்தேகப்பட்டு சுனிதாவ அடிச்சு உதைச்சு கொடுமைப்படுத்திருக்கான் மகேஷ். இதுக்கு மேலேயும் இவன் கூட வாழ முடியாதுன்னு முடிவு பண்ண சுனிதா, மகேஷ்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி பிரிஞ்சுட்டாங்க.

* மகேஷிடம் இருந்து விவாகரத்து வாங்கிய சுனிதா
* 2வது திருமணம் செய்து கொண்ட சுனிதா
* சுனிதா திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் ஆத்திரம்


அதுக்குப்பிறகு, கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து வந்த சுனிதா, 2வது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த விஷயம் மகேஷுக்கு தெரிஞ்சு ஆத்திரமடைஞ்சிருக்கான். என்ன விவாகரத்து பண்ணிட்டு நீ வேற கல்யாணம் பண்னிக்கிட்டு சந்தோஷமா இருக்கியான்னு கடுப்பான மகேஷ், முன்னாள் மனைவி சுனிதாவ கொலை செய்ய திட்டம் போட்டுருக்கான். சம்பவத்தன்னைக்கு, சுனிதாவோட கணவர் வழக்கம்போல வேலைக்கு கிளம்பி போயிட்டதால, 3 மாசம் கர்ப்பிணியான சுனிதா மட்டும் தான் வீட்டுல இருந்தாங்க. இத தெரிஞ்சுக்கிட்டு அங்க போன மகேஷ், அவங்க வீட்டு காலிங் பெல்ல அடிச்சிருக்கான். அப்போ, கதவ திறந்த சுனிதா, வெளிய நின்னுட்டு இருந்த மகேஷ பாத்ததும் ஷாக்காகி, எதுக்காக இங்க வந்தன்னு கேட்டு சத்தம் போட்டுருக்காங்க.

* முன்னாள் மனைவி சுனிதா மீது கோபத்தில் இருந்த மகேஷ்
* சுனிதாவுக்கு ஏற்பட்ட விபரீதம்
* மகேஷை கைது செய்த காவல்துறையினர்


அப்போ, அவங்க வாய பொத்தி வீட்டுக்குள்ள தள்ளிவிட்டு, கதவ லாக் பண்ண மகேஷ், சுனிதாவ கத்தியால கண்மூடித்தனமா குத்தி கிழிச்சிருக்கான். நான் மூணு மாசம் கர்ப்பமா இருக்கேன், என்ன விட்ருன்னு சுனிதா கெஞ்சி அழுதுருக்காங்க. ஆனா, அவங்கள கிட்டத்தட்ட ஆறு நிமிஷம் கண்மூடித்தனமா கத்தியால குத்தி கிழிச்சிருக்கான். அதுல, நிலைகுலைஞ்ச சுனிதா சம்பவ இடத்துலேயே சரிஞ்சு விழுந்து உயிரிழந்துட்டாங்க. விசாரணையில, மகேஷ்தான் கொலையாளிங்குறத கண்டுபிடிச்ச போலீஸ், அவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்சு சிறையில அடைச்சிட்டாங்க.

Related Link
திருமணமான மூன்றே மாதத்தில் மரணம்

திருமணமான மூன்றே மாதத்தில் மரணம்

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved