Also Watch
Read this
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை திமுக அரசு முடக்க முயற்சிப்பதாக கண்டனம்.. திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 24ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Updated: Aug 21, 2024 06:10 AM
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க முயற்சிப்பதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் வரும் 24-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved