Also Watch
Read this
Posted on: Aug 26, 2024 10:26 AM
By: Srini Vasan

சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.5.22 கோடியில் அயனாவரம் சலவைக் கூடம் மற்றும் நியாயவிலைக் கடைக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமின்றி, கொளத்தூர் உணவுப்பொருள் வழங்கல் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் கொளத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved