சேலத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலூர் மேச்சேரி பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தருண்குமார் என்ற இளைஞர் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தருண்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.