சாலையில் அமர்ந்து, குடும்பத்துடன், ’நீ கொஞ்சம், நான் கொஞ்சம்’ என்று கூறி, ஷேர் செய்து, மது குடித்த காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காரனோடை பகுதியில், சாலையோரம் இருக்கும் டாஸ்மாக் கடை அப்பகுதி மக்களுக்கு தலைவலியாக மாறி உள்ளது. பள்ளி மற்றும் கடை வீதிக்கு அருகிலேயே இருக்கும் இந்த டாஸ்மாக், அவ்வழியாக செல்லும் பெண்களையும், குழந்தைகளையும் முகம் சுழிக்க வைக்கிறது. டாஸ்மாக் கடைக்கு வரும் நபர்கள் தான், மது போதையில் தள்ளாடி, மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு போட்டியாக பெண்களும் களமிறங்கி விட்டனர். நான்கு பேர், டாஸ்மாக் அருகில் இருக்கும் ஒரு கடை முன் உட்கார்ந்து, ”உனக்கு கொஞ்சம், எனக்கு கொஞ்சம்” என்று, மதுவை ஷேர் செய்து குடித்தனர். இதில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணும் மதுவை அளந்து ஊற்றுவதுடன், வாட்டர் மிக்ஸ் செய்த மதுவை ஒரே மூச்சாக குடிக்கிறார். அவருக்கு சைடிஷ் மிக்ஸர் வேறு, தயாராக இருந்தது. இப்படி, சாலையில் அமர்ந்து குடும்பமே மது அருந்துவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் சென்றனர். பள்ளி மற்றும் பொது மக்களின் நடமாட்டம் உள்ள இடத்தில், டாஸ்மாக் இருப்பதால், யாருமே அவ்வழியாக செல்ல முடியவில்லை என்றும்,மது போதை நபர்களால், தொந்தரவு இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.