news-tamil-logo

3/22/2026, 10:05:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரியருடன் உரிமையாக கேட்கும் பெண்கள்
tv

Also Watch

tv

Read this

அரியருடன் உரிமையாக கேட்கும் பெண்கள்

விருதுநகர் மாவட்டம்

Posted on: Feb 12, 2026 08:36 AM

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR 1

மகளிர் உரிமைத் தொகையை அரியருடன் உரிமையாக பெண்கள் கேட்பதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் பேசியதால் கலகலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி துரோகத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட கூட்டணி என விமர்சனம் செய்தார்.

தமிழகம் தலைகுனியாது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தமிழக பாடநூல் கழக தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரை

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற வருகிறது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல்
ஐ.லியோனி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் பொய் பிரச்சாரம்

அவர் பேசும்போது பிரதமர் மோடி வடமாநிலங்களில் பேசும் போது தமிழகத்தில் வட மாநிலத்தவர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பேசுவதாகவும் தமிழகத்தில் வந்து பேசும்போது தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசுகிறார் என கூறினார்.

நாடாளுமன்றத்தில் திரித்து பேசிய நிர்மலா சீதாராமன்

குறிப்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் சொன்னதாக கூறி தமிழ் பிச்சை எடுக்க கூட உதவாது என்ற அடிப்படையில் பேசியதாகவும், பெரியார் சொன்ன நேரத்தில் தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி இருந்ததாகவும் அப்போது தமிழை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது ஆங்கிலமும் கற்றுக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் கூறியதை திரித்து நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் கூறினார்.


தேசிய துரோகிகள் கூட்டணி

தமிழை கொச்சைப்படுத்தியது இறைவனாக இருந்தாலும் எதிர்த்துப் பேசும் தமிழ் புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளதாக கூறினார்.மேலும் அவர் பேசுகையில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் என்.டி.ஏ. கூட்டணி என்பதற்கு மறு பெயர் தேசிய துரோகிகள் கூட்டணியாகும் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு துரோகம் செய்தார், டிடிவி தினகரன் சசிகலாவுக்கு துரோகம் செய்தார், ஜி.கே. வாசன் ஜி.கே. மூப்பனாருக்கு துரோகம் செய்தார், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி அவரது சொந்த தந்தைக்கு துரோகம் செய்தார் இவ்வாறு துரோகிகளாக சேர்ந்து கட்டமைத்த கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறாது என்று கூறினார்.

டபுள் எஞ்சின் எதற்காக பயன்படுத்தப்படும்?

மேலும் மோடி பேசுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது டபுள் எஞ்சின் கொண்ட கூட்டணி என்றும் டபுள் எஞ்சின் எதற்காக பயன்படுத்தப்படுவது என்றால் செயல் இழந்து போன ஒரு ரயில் பெட்டியை இழுப்பதற்காக இரண்டு என்ஜின்களை கொண்டு முன்னாலும், பின்னாலும் வைத்து இழுத்து செல்வார்கள். அதன் அடிப்படையில் செயலிழந்த அதிமுக கட்சியை இரண்டு என்ஜின்கள் மூலம் நகர்த்த மோடி முயற்சி செய்து வருவதாக கூறினார்.

அரியர் தொகையையும் சேர்த்து தாருங்கள்

திண்டுக்கல் லியோனியை தொடர்ந்து மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில் மகளிர் உரிமை தொகையை பெற்றுத் தருவதில் அமைச்சர்களாகிய நாங்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிகவும் சிரத்தை எடுத்து வருவதாகவும் அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சியில் தற்போது அதிகம் பேருக்கு மகளிர் உரிமை தொகையை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சிரிப்பலையில் மூழ்கிய பொதுக்கூட்டம்

அதிலும் தனது வீட்டில் அருகில் இருக்கும் பெண் ஒருவர் இரண்டு வருடங்களாக மகளிர் உரிமை தொகை பெறாததால் அந்த அரியர் தொகையையும் சேர்த்து வாங்கி தர வேண்டும் என்று கூறுவதாகவும் பேசிய பேச்சால் பொதுக்கூட்டமே சிரிப்பலையில் மூழ்கியது.

தவெகவை விமர்சித்த அமைச்சர்

மேலும் அவர் பேசுகையில் கடந்த வாரம் ஒரு லட்சம் பேர் திரண்டு தமிழக முதல்வரை உற்சாகமாக வரவேற்று, அவரவர் வீட்டிற்கு பத்திரமாக போய் சேர்ந்தனர் என்றும், ஆனால் சில நூறு பேரை கூட்டி வைத்துக் கொண்டு 41 பேரை படுகொலை செய்த ஒரு நபரும் புதிதாக கட்சி தொடங்கி அரசியலில் நுழைந்து இருப்பதாகவும் தவெகவை விமர்சனம் செய்தார். அம்மாதிரியான கட்சிகள் இருக்கும் இந்த நேரத்திலும் ராணுவ கட்டுப்பாடுடன் திமுக கட்சி செயல்படுவதாக கூறினார்.

Related Link
சாலையில் படுத்து மறியல்

சாலையில் படுத்து மறியல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்கோடா குஷாக் Facelift கார் இந்தியாவில் அறிமுகம்

0
3 mins agoshare
Skoda facelift








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved