news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய்க்கு போட்டியாக நிற்பது யார்?
tv

Also Watch

tv

Read this

விஜய்க்கு போட்டியாக நிற்பது யார்?

பெரம்பூர் வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றிய பரபரப்பு அடங்கும் முன்பே, அந்த தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவில் என்னென்ன பஞ்சாயத்து என்ற தகவல் லீக் ஆகியுள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகருக்கு எதிராக அமைச்சர் தரப்பு தீவிரமாக காய் நகர்த்தி வர, லோக்கல் நிர்வாகிகளும் அதிருப்தியை கொட்டி தலைமைக்கு கடிதம் அனுப்ப, வட சென்னை அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.

* பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகருக்கு எதிராக கட்டம் கட்டும் அமைச்சர் சேகர்பாபு
* தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்கக் கூடும் என கூறப்படுகிறது
* விஜய்க்கு போட்டியாக திமுகவில் யார் நிற்பது?


சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, யாருடைய கோட்டையை யார் கைப்பற்றுவது? மீண்டும் தக்க வைப்பது யார்? என அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் என்ன நிலவரம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வாக ஆர்.டி.சேகர் இருந்து வருகிறார். சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரான ஆர்.டி.சேகர் மீது சொந்த கட்சி நிர்வாகிகள் இதுவரை வாசிக்காத புகார்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொது இடத்தில் நிர்வாகிகளை மதிக்காமல் வார்த்தையை விடுவது, அநாகரீகமாக நடத்துவது என்பதால் அவர் மீது யாருக்குமே நல்ல அபிப்ராயமே இல்லை என சொல்லப்படுகிறது.

* பெரம்பூர் தொகுதியில் யார் போட்டி?
* வெள்ள பாதிப்பு, மக்களை சந்திக்கவில்லை என்பதால் எம்.எல்.ஏ.மீது அதிருப்தி
* சேகர் பாபுவின் முட்டுக்கட்டையை தாண்டி சீட்டு கிடைக்குமா என எதிர்பார்ப்பு

ஆர்.டி.சேகருக்கு எதிராக நிர்வாகிகள் 50 பேர், மண்டல பொறுப்பாளர் ஆ.ராசாவிடம் புகார் அளித்த சம்பவங்களும் அரங்கேறின என்பதால், மீண்டும் ஆர்.டி.சேகர் போட்டியிட்டால் சொந்த கட்சிக்காரர்களே வாக்களிக்க மாட்டார்கள் என பேசிக் கொள்ளப்படுகிறது. நிர்வாகிகள் தான் இப்படி என்றால் பொதுமக்கள் மத்தியிலும் எம்.எல்.ஏ. மீது பெரிய நம்பிக்கை இல்லை என்கிறார்கள்.! வெள்ள பாதிப்பு வந்த போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூட சந்திக்க செல்லவில்லை என்பதால் மக்களும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். என்னதான், தொகுதி மக்கள் மத்தியிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ ஆர்.டி.சேகர் மீது BAD IMAGE இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் குட் புக்கில் ஆர்.டி.சேகரும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே அமைச்சர் சேகர்பாபுவுக்கும் ஆர்.டி.சேகருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

* உதயநிதிக்கு நெருக்கமாக ஆர்.டி.சேகர் இருப்பதால் சேகர் பாபுவுக்கு புகைச்சல்
* திமுகவின் கோட்டை பெரம்பூர் இந்த முறையும் தக்க வைக்கப்படுமா?


ஆர்.டி.சேகருக்கு வருகிற தேர்தலில் சீட்டு கொடுக்க விடக் கூடாது என முடிவோடு இருக்கிறாராம் அமைச்சர் சேகர்பாபு. இதனால், வட சென்னை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதோடு, ஆர்.டி.சேகருக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு வேறொரு ரூட்டில் காய் நகர்த்தி வருகிறாராம். அதாவது, உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளராக அறியப்படும் ஆர்.டி.சேகரை வீழ்த்த, உதயநிதி அணியில் இருந்தே ஒருவரை வேட்பாளராக பெரம்பூர் தொகுதிக்கு பரிந்துரை செய்யலாம் என முடிவு செய்திருக்கிறாராம். அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் வலது கரமாக இருக்கும் தூத்துக்குடி ஜோயலை நிறுத்தி வெற்றி பெற வைக்கலாம் என்ற நினைப்பில் சேகர்பாபு இருப்பதாக சொல்லப்படுகிறது.

* உதயநிதி தரப்பில் இருந்தே ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்க நினைக்கும் சேகர் பாபு
* வருகிற தேர்தலிலும் அதை நிரூபிக்குமா?


சென்னை மாவட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கை ஓங்கியிருக்கும் நிலையில், சேகர்பாபுவை மீறி ஆர்.டி.சேகருக்கு சீட்டு கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பது போக போக தான் தெரியும். 1962க்கு பிறகு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 1991, 2001, 2011,2016 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற 10 தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே திமுகவின் கோட்டையான பெரம்பூர் வருகிற தேர்தலிலும் அதை நிரூபிக்குமா? அல்லது வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டு கோட்டையை தவற விடுமா? என்பதும் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

Related Link
இரண்டு பிரிவுகளாக நிற்கும் பாமக

இரண்டு பிரிவுகளாக நிற்கும் பாமக

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026

5
2 hrs 21 mins agoshare
மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved