Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்து 11 மதகுகள் வழியாக விநாடிக்கு 4 ஆயிரத்து 151 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியில் 118.90 அடியை எட்டியது.
இதனால் கரையோரம் உள்ள ஆழியார், ஆனைமலைம் ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.