திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 10ம் நாளில் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் தங்க பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்சவத்தில் நம்பெருமாள் நாச்சியார் மோகினி அலங்காரத்தில் வெண்ணிற பட்டில், தங்க கோலக்கிளி தாங்கி, சவுரிக்கொண்டை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து தங்க பல்லாக்கில் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.