வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு ஆலையில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வல்லண்டராமம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தற்காலிகமாக பட்டாசு கடை நடத்த அனுமதி வாங்கி விட்டு வீட்டிலேயே நாட்டு வெடிகள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், பட்டாசுகளை பறிமுதல் செய்து தற்காலிக பட்டாசு கடைக்கும் சீல் வைத்தபோது, கடையை மூடினால் தங்களது வாழ்வாதாரமே போய்விடும் என சதீஷ்குமாரின் மனைவி அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதார்.இதையும் படியுங்கள் : தனியார் மதுபான பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்