news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், கடும் நெரிசல்
tv

Also Watch

tv

Read this

ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், கடும் நெரிசல்

சேலம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yercaud

தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை எழிலை கண்டு ரசித்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், ஏற்காட்டிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
தற்போது, தொடர் விடுமுறையால், ஏற்காடு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அண்ணா பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

பூங்காவில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு புல்வெளி மைதானத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.
படகு இல்லத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்து படகு சவாரி செய்தனர்.
அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படை எடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால். சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். போக்குவரத்து போலீசார் நெரிசலை சீர் செய்து வருகின்றனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
14 hrs 16 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau