இன்றும் தங்கத்தின் விலை 2 முறை உயர்ந்து, உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 91 ஆயிரத்தை கடந்தது. சென்னையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,425 ஆக அதிகரித்துள்ளது. பிற்பகல் நிலவரப்படி... ஒரு கிராம் - ரூ.11,500 (+ ரூ.75)ஒரு சவரன் - ரூ.92,000 (+ ரூ.600)தங்கம் விலை மேலும் உயரும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலையால், ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்க நகையை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக காலை, மாலை என தொடர்ந்து 2 நேரமும் தங்கத்தின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த நிலையில், நேற்று காலை தான் அதிரடியாக குறைந்து, மகிழ்ச்சியடைய செய்தது.ஆனால், மகிழ்ச்சி நீடிக்காத நிலையில், தொடர்ந்து பிற்பகலில், மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,340க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை ஆனது. இன்றைய நிலவரம்:அக்டோபர் 11ஆம் தேதியான இன்று சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கும், ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கும், ஒரு கிலோ ரூ.1,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பிற்பகல் நிலவரப்படி... ஒரு கிராம் - ரூ.11,500 (+ ரூ.85)ஒரு சவரன் - ரூ.92,000 (+ ரூ.600)ஒரே நாளில் ரூ.1280 உயர்வு