திருவள்ளூர் மாவட்டம் பழற்வேகாடு அருகே ஆறாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கோரை குப்பம் பகுதியில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் மீஞ்சூர் இளஞ்செழியன் அங்கு படிக்கும் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் ஊர் பொதுமக்கள் ஆசிரியரை வகுப்பறையின் உள்ளே வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் தற்காலிக ஆசிரியரை விசாரணைக்காக சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.