நெல்லை பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற மாணவனை நாய்கள் துரத்த, உயிருக்கு பயந்த மாணவன் புத்தகப் பையை வீசிவிட்டு தப்பியோடிய காட்சி வெளியாகி உள்ளது. சத்தம் கேட்டு அருகிலிருந்து வந்தவர் நாய்களை விரட்டி விட்ட பின்னர், மாணவன் திரும்பி வந்து தனது புத்தகப் பையை எடுத்து சென்றான். நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கூறும் மக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.