Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள 200 வருட பழமையான காவல் நிலைய கட்டடத்தை இடிக்க எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த கட்டடம் காவலர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ளும் காப்பகமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
உதகை நகர காவல் நிலைய கட்டடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு இடித்து புதிய கட்டடம் கட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு
எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்த திட்டமும் பலனளிக்காத நிலையில், குழந்தைகளை கவனிக்கும் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது.